அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி... கிரிப்டோ கரன்சிக்கு வரி!

பட்ஜெட்டில் அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சிhindu கோப்பு படம்

பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி செய்து தரப்படும் என்றும் கிரிப்டோ போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழித்தடங்கள், பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகிய 7 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பிரதமரின் கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி செய்து தரப்படும் என்றும் பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மன அழுத்தத்தை குறைக்க தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கும் 'மன ஆரோக்கிய' திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும் என்றும் திவாலான நிறுவனங்களை மூட கால அவகாசம் 2 வருடங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்படும் என்றும் மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க 'பர்வத்மாலா' திட்டம் தொடங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in