சர்வதேச காற்றாடி திருவிழா: அடுத்த கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மாமல்லபுரம்!

சர்வதேச காற்றாடி திருவிழா: அடுத்த கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மாமல்லபுரம்!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன. அதுபோல் அங்குச் சர்வதேச காற்றாடி திருவிழாவும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சர்வதேச காற்றாடி திருவிழாவில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட ஆயிரக்கணக்கான அழகான காற்றாடிகள் திறந்த வெளியில் பறக்க உள்ளன. இத்திருவிழா ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள டிடிடீசி ஓஷன் வியூவில் 14 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுகள், பட்டம் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் காற்றாடி திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்கக் குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் கொண்டாட்டம் முடிந்த நிலையில் அடுத்த கொண்டாட்டத்திற்குத் தயாராகியுள்ளது மாமல்லபுரம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in