சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தகக்  கண்காட்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னையில் ஜனவரி மாதத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் முன்பே அறிவித்ததன்படி, சென்னையில் 2023 ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில்  சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் சுமார் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டம் உள்ளது.

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவர்களின் நாட்டின் பெருமைகள், சிறந்த புத்தகங்களைக் கண்காட்சியில் வைக்கலாம். புத்தகங்களைப் படிப்பதற்கான படிப்புரிமை குறித்தும் மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் ” என்றார். மேலும் அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தும் திட்டம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in