சமையல்காரர் முதல் நிர்வாக அதிகாரி வரை... மத்திய அரசில் 660 காலி பணியிடங்கள்... முழு விபரம்!

ஐபி புலனாய்வு அதிகாரி
ஐபி புலனாய்வு அதிகாரி

மத்திய அரசின் இன்டலிஜென்ஸ் பீரோ துறையில் ரூ.1.41 லட்சம் வரையிலான ஊதியத்துடன், 660 பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் தற்போது விண்ணப்பிக்கலாம்.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புலனாய்வு பணியகத்துக்காக(IB), உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO), ஜூனியர் புலனாய்வு அதிகாரி (JIO), பாதுகாப்பு உதவியாளர் (SA) மற்றும் சில பதவிகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

புலனாய்வு பிரிவில் வேலை வாய்ப்பு
புலனாய்வு பிரிவில் வேலை வாய்ப்பு

இந்த நிலைகளில் ACIO-Iல் 80 நிர்வாகப் பதவிகளும், ACIO-II ல் 136, JIO-I - 120, JIO-II - 170 மற்றும் SA இல் 100 நிர்வாகப் பதவிகளும் அடங்கும். மேலும், JIO-II/Tech-ல் 8 இடங்களும், ACIO-II/Civil Works-ல் 3 இடங்களும், JIO-I/MT-ல் 22 இடங்களும் உள்ளன. கூடுதலாக, கணிசமான எண்ணிக்கையில் சமையல்காரர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களுடன், இணை துணை இயக்குநர்/ஜி-3, புலனாய்வுப் பணியகம், உள்துறை அமைச்சகம், 35 எஸ்பி மார்க், பாபு தாம், டெல்லி-110021 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3.

ஐபி
ஐபி

ஐபி துறையில் பல்வேறு பதவிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் ரூ.1,42,400 வரை நீடிக்கிறது. புலனாய்வு பணியாளர்களுக்கு, அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் பாதுகாப்புக்கான சிறப்பு படியாக பெறலாம். மேலும் சீருடைப் படியாக ரூ10,000, இரு எல்டிசி தொகுப்புகள், குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்படும் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in