எல்லை மீறிய இன்ஸ்டாகிராம் பழக்கம்: 8 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பாலியல் பலாத்காரம்

சிறுமி பாலியல் பலாத்காரம்
சிறுமி பாலியல் பலாத்காரம்எல்லை மீறிய இன்ஸ்டாகிராம் பழக்கம்: 8 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பாலியல் பலாத்காரம்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 8 பேரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் விகாஸ் தாக்கூர். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அவருடன் நெருக்கமாய் இருப்பது போன்று புகைப்படம், வீடியோக்களை விகாஸ் தாக்கூர் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று விகாஸ் தாக்கூர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால், அவர் அழைக்கும் போது அந்த இடத்திற்குப் போன சிறுமியை மிரட்டி பலமுறை விகாஸ் தாக்கூர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

இவரால் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த வாரம் தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார். ஆனால் , அவரை மார்ச் 3-ம் தேதி தொடர்பு.கொண்ட விகாஸ், ஒரு ஓட்டலில் வந்து தன்னை சந்திக்கும்படி கூறியுள்ளார். இல்லாவிட்டால் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி அங்கு வந்துள்ளார். அவருக்குத் தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்தை விகாஸ் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.

இதையடுத்து அவரை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு விகாஸ் கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின் அவரது இரண்டு நண்பர்கள், சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த 5 பேர் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கதறி சிறுமி அழுகும் சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் வரவும், விகாஸ் உள்ளிட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதன் பின் அந்த சிறுமியை அப்பகுதி மக்கள் வீட்டில் கொண்டு போய் சேர்ந்துள்ளனர். தனக்குத் தொடர்ந்து நடந்த கொடுமையை சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்த பின்பு இந்த கொடூரச்சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பர்ரா எல்லைக்குட்பட்ட ஹூக்கா பாரில் நடந்தது தெரிய வந்தது. அத்துடன் சிறுமியின் உடலில் விகாஸ் பிளேடால் தனது பெயரை எழுதியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து விகாஸ் தாக்கூர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து நாசப்படுத்திய வாலிபரின் செயல், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in