இரவில் திடீரென முடங்கியது இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன?

இரவில் திடீரென முடங்கியது இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன?

உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இன்ஸ்டாகிராம் முடங்கியது. இது அதன் பயன்பாட்டாளர்களை மிகவும் சோர்வடைய வைத்தது.

சமூகவலைதளங்களின் வீச்சு நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் நேற்று இரவு 10.30 மணி முதல் 11.45 வரை இன்ஸ்டாகிராம் இயங்கவில்லை. அது முடங்கிப் போனது.

இந்தப் பிரச்சினையானது ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளில் இருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்ஸ்டாகிராம் செயலி முடங்கி இருந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமின் தொழில்நுட்பக் குழு துரிதமாக செயல்பட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீண்டும் இயங்கச் செய்தனர். இரவில் ஒரு மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதன் பயனீட்டாளர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தனர். மீண்டும் இன்ஸ்டாகிராம் செயலி இயங்கியதுமே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in