‘பிராட்காஸ்ட் சேனல்’: இன்ஸ்டாகிராம் அசத்தல் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் - பிராட்காஸ்ட் சேனல்ஸ்
இன்ஸ்டாகிராம் - பிராட்காஸ்ட் சேனல்ஸ்

பிராட்காஸ்ட் சேனல் என்னும் பிரத்யேக வசதியினை இன்ஸ்டாகிராம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் தளங்களைவிட, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பயனர்களை தக்க வைக்க அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகளையும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்க்ர்பர்க் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளார். ’பிராட்காஸ்ட் சேனல்’ என்னும் இந்த வசதியின் வாயிலாக சமூக ஊடக பிரபலங்கள் தங்களைப் பின்தொடர்வோருக்கு நேரடியாக படங்கள், செய்திகள், வீடியோக்கள், குரல் பதிவுகள் உள்ளிட்ட பலவற்றையும் அனுப்ப முடியும்.

போட்டி நிறுவனமான ’டிக்டாக்’ தளத்துக்கு ஈடுகொடுப்பதற்காக இன்ஸ்டாகிராம் ’ரீல்ஸ்’ வசதியை பெரிதும் முன்னிறுத்தியது. ஆனால் அதில் தாங்கள் பின்தொடரும் பிரபலங்கள் அல்லாதோரின் ரீல்ஸ் வீடியோக்களும் இடம்பெறுவதாக பலரும் குறைபட்டார்கள். இந்த தடுமாற்றத்தை தவிர்க்கும் நோக்கிலும், இன்னும் பிற அனுகூலங்களுக்காகவும், பிராட்காஸ்ட் சேனல் வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பிரபலங்களுடனான ’ஆஸ்க் மி எனிதிங்’ என்ற தலைப்பிலான பிரத்யே உரையாடலுக்கும் இந்த வசதி பெரிதும் உதவ இருக்கிறது.

இதன்படி மார்க் ஸக்கர்பர்க் தனக்கென தனியாக ’மெட்டாவர்ஸ்’ சார்ந்த ’மெட்டா’ என்ற சேனலை முதல் நபராகத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் பயனர்கள் மத்தியில் அறிமுகமாகி உள்ள இந்த பிராட்காஸ்ட் சேனல் வசதி படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் பரவலாக்கப்பட உள்ளது. இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சில மாதங்களில் தனது இதர சேவைகளான ஃபேஸ்புக் மற்றும் மெசெஞ்சரிலும் இந்த புதிய வசதியினை அறிமுகம் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in