தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்டா ரீல்; இளம்பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்: போலீஸ் அதிரடி

தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்டா ரீல்; இளம்பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்: போலீஸ் அதிரடி

தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி இன்ஸ்டா ரீல் செய்த இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது உத்தரபிரதேச காவல்துறை.

உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்தவர் வைஷாலி சவுத்ரி. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். தனது இன்ஸ்டாகிராமில் 16 லட்சம் பாலோயர்களை அவர் கொண்டுள்ளார். விதவிதமான ஆடைகளை அணிந்து கார்கள் மற்றும் பைக்குகளில் அவர் வெளியிடும் இன்ஸ்டா ரீல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அண்மையில், தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி இன்ஸ்டா ரீல் செய்து இருக்கிறார் வைஷாலி. இந்த வீடியோ வைரலானதோடு, காவல்துறையினரின் கண்ணில் பட்டது. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி நானாசாகிப்பால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, அவருக்கு 17 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி காட்டி இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் இப்படி இன்ஸ்டா ரீல் செய்து வெளியிடுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in