விபத்தில் சிக்கி மேம்பாலத்தில் மயங்கி கிடந்த ஊழியர்; பையில் இருந்த 2.7 கிலோ நகை: இன்ஸ்பெக்டரின் மனிதநேயம்

உரிமையாளரிடம் நகைகளை ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்த்
உரிமையாளரிடம் நகைகளை ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்த்

சாலை விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் குவியும் பாராட்டு குவிந்து வருகிறது. காயமடைந்த நபரின் பையில் 1.41 கோடி மதிப்புள்ள நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் சிவஆனந்த் நேற்று இரவு பாடி மேம்பாலம் வழியாக ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். பாடி மேம்பாலம் கீழே கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் மயங்கி இருப்பதை பார்த்த ஆய்வாளர் சிவஆனந்த் உடனே ஜீப்பை நிறுத்தி அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் காயமடைந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது பையை திறந்து பார்த்த போது அதில் 1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ தங்க நகை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் அவர் செல்போனில் கடைசியாக பேசிய நபருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் காயமடைந்த நபர் குறித்து திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்த ஹரிஹரன்(55) என்பதும் இவர் புழல் இயங்கி வரும் பாக்கியம் ஜெம்ஸ் கோல்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் நேற்று ஹரிஹரன் புழல் பகுதியில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ கொண்ட தங்க நகைகளை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கு கொண்டு செல்லும் போது சாலை விபத்தில் காயமடைந்தது தெரியவந்தது. மேலும் நகைக்கு உண்டான ஆவணங்கள் இருந்ததால் போலீஸார் பாக்கியம் ஜெம்ஸ்@கோல்ட் நிறுவனத்தின் இயக்குநர் கதிரவனை நேரில் அழைத்து தங்க நகைகளை ஒப்படைத்தனர்.

விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்ததுடன் அவர் கொண்டு வந்த நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் சிவ ஆனந்த்துக்கு உயர் அதிகாரிகள் மற்றும் நகை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in