இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகளை ஆய்வு செய்யவும்: பள்ளிக்கல்வித்துறையின் மழை அலர்ட்

இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகளை ஆய்வு செய்யவும்: பள்ளிக்கல்வித்துறையின் மழை அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள் விவரம், வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் மேம்பாடு அடையவும், பள்ளிகளின் தரம் உயர்த்தவும் உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, தலைமை ஆசிரியர் கண்காணிப்பு பதிவேடு, அனைத்து ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு, மேற்பார்வை பதிவேடு ஆகியவை வைக்கப்பட வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டுரை, பாடவாரியான நோட்டு புத்தகம், வீட்டு பாட நோட்டு புத்தகம், ஓவிய நோட்டு புத்தகம், தேர்வு விடைத்தாள் மற்றும் தேர்வு நோட்டு, அறிவியல் ஆய்வகம் பயன்பாடு பதிவேடு, நூலக பாடவேளை, நூலக புத்தகங்கள் வழங்கப்படும், பதிவேடு மற்றும் இரண்டு மற்றும் நான்கு வரி நோட்டு புத்தகம் ஆகியவற்றை இன்றைய தேதி வரை கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள் விவரம், வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 6, முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செல்லும் இல்லம் தேடிக் கல்வி மையங்களின் விவர பதிவேடுகளையும், உயர்கல்வி வழிகாட்டி கால அட்டவணை மற்றும் நடத்தப்பட்ட பாடவேளை விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in