விதைப்பந்துடன் தயாராகும் விநாயகர் சிலைகள்: அசத்தும் மதுரை சிறைவாசிகள்

விதைப் பந்தை வைத்து தயாரிக்கப்பட்ட விநாயக் சிலைகள்
விதைப் பந்தை வைத்து தயாரிக்கப்பட்ட விநாயக் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறையில் தண்டனைக் கைதிகளின் கை வண்ணத்தில் தயாராகும் விதைப் பந்து விநாயகர் சிலைகள், விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என சிறைத்துறையினர் தகவல்.

சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கைதி
சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கைதி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணி நாடு முழுவதும் தீவிரமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் மிக முக்கிய சிறைச்சாலையாக விளங்கக்கூடியது மதுரை மத்திய சிறைச்சாலை. இங்கு உள்ள சிறை அங்காடி மூலம் தண்டனை கைதிகளை வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு, பலகாரம், நர்சரி கார்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறை வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்
சிறை வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்

இச்சூழலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தண்டனைக் கைதிகளை வைத்து களிமண் மற்றும் விதைப் பந்துகளை வைத்து ஒன்றை அடி அளவில் விநாயகர் சிலை செய்யும் பணியானது துவக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வார காலம் நடைபெறும் இப்பணிகள் முடிந்தவுடன் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறை அங்காடி மூலம் விநாயகர் சிலைகளை விற்பனைக்கு வைக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மதுரை மத்திய சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in