2015-ல் மனைவியை கொன்றவர்; தொடர்ந்து மனஉளைச்சல்: சிறையில் உயிரை மாய்க்க முயன்ற ஆயுள் கைதி

2015-ல் மனைவியை கொன்றவர்; தொடர்ந்து மனஉளைச்சல்: சிறையில் உயிரை மாய்க்க முயன்ற ஆயுள் கைதி

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சின்னராஜின் மகன் 58 வயதான ஆரோக்கியசாமி. இவர், தனது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தண்டனை கைதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென ஆரோக்கியசாமி பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த சக கைதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கைதி ஆரோக்கியசாமியின் தற்கொலை முயற்சி தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், இவர் தற்கொலை செய்து கொள்ள பிளேடு கிடைத்தது எப்படி? சிறை காவலர்கள் யாரேனும் உதவினார்களா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in