பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று நிறைவு: 3 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முதல் சுற்று நிறைவில் 3 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் சர்வதேச புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 800க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்படுகின்றன. சீறி வரும் காளைகளை அடக்க 335 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர். முதல் சுற்று நிறைவில் 135 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 25 வீரர்கள் காளைகளுடன் மல்லுக்கட்டினர். இதில் பாலமேடு ராஜா 7 காளை அடக்கி முதலிடம், அரவிந்த் 6 காளைகளை அடக்கி இரண்டாம் இடம், அஜித்குமார் 3 காளைகளை அடக்கி மூன்றாமிடம் பிடித்தனர். மாடுகள் முட்டியதில் ராஜேந்திரன்(60), பிரவீன்குமார் (21) உள்பட 3 பேர் காயமடைந்தனர். தற்போது 2-ம் சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in