இன்ஃபோசிஸ் - டெக் மஹிந்திரா இடையே தாவிய ‘தலை’: இந்திய ஐடி துறையில் முக்கிய மாற்றம்

மோஹித் ஜோஷி
மோஹித் ஜோஷி

இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா என இந்தியாவின் 2 முக்கிய ஐடி நிறுவனங்களின் உயர் பதவிகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றம், இந்திய ஐடி துறையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் மோஹித் ஜோஷி. இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் தரப்பிலும் இது உறுதி செய்யப்பட்டது. மார்ச் 11 அன்று அவர் பணியிலிருந்து விடுபட்டாலும், ஜூன் 9 அன்றே அவர் திட்டவட்டமாக பணியிலிருந்து விடை பெறுகிறார். இடைப்பட்ட காலம் அவரது விடுமுறையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாக இன்போசிஸ் அறிவித்தது.

இன்போசிஸ் அறிவிப்பு வெளியான சூட்டில் டெக் மஹிந்திரா நிறுவனம் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி தங்கள் நிறுவனத்தின் அடுத்த எம்டி மற்றும் சிஇஓ பொறுப்பில் விரைவில் மோஹித் ஜோஷி இணைகிறார் என்று அறிவித்தது. தற்போது அந்த பதவியில் இருக்கும் சி.பி.குர்னானியின் பதவிக்காலம் இந்த ஆண்டின் இறுதியோடு முடிவடைவதை முன்னிட்டு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.குர்னானி, இந்திய ஐடி துறையின் மிக நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய பெருமைக்கும் உரியவராகிறார். 2004ல் டெக் மஹிந்திராவில் சேர்ந்த இவர், ஊழலில் வீழ்ந்த சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தை டெக் மஹிந்திரா கைக்கொண்டதிலும், தனித்த அடையாளம் நிறுவியதிலும் பெயர் பெற்றார். ஒரே நாளில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்புகளால் ஐடி துறை இன்று பரபரப்புக்கு ஆளாகி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in