‘மாதத்தில் 10 நாட்களேனும் அலுவலகம் வரவும்’ ஊழியர்களை நோகாது இழுக்கும் இன்ஃபோசிஸ்!

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணியாளர் மற்றும் அலுவலர்களை, மாதத்தில் 10 நாட்களேனும் அலுவலகம் வந்து செல்லுமாறு இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனாவின் பிடியிலிருந்து உலகம் விடுபட்ட போதும், டெக் மற்றும் ஐடி நிறுவனங்களை அவை இன்னும் ஆக்கிரமித்தே வருகின்றன. கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றி பழக்கப்பட்ட ஐடி ஊழியர்களால், அதன் பிறகு அலுவலகத்துக்கு திரும்ப முடியவில்லை. கொரோனா கவலைகள் அகன்ற பிறகு, இதர அலுவலகங்கள் வழக்கம்போல முழுப் பணியாளர்களுடன் இயங்க, ஐடி நிறுவனங்கள் இன்னமும் அதன் ஊழியர்களை எதிர்நோக்கி காத்துள்ளது.

ஐடி நிறுவன மாதிரி
ஐடி நிறுவன மாதிரி

இந்த நிலையில் டெக் மற்றும் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வலுக்கட்டாயமாக அலுவலகம் வருமாறு நிர்பந்திக்கவும் தயங்குகின்றன. வீட்டிலிருந்து பணியாற்றி பழகிப்போன திறமை வாய்ந்த ஊழியர்கள் உடனடியாக, தங்களுக்கு அனுகூலமான அடுத்த ஐடி நிறுவனத்துக்கு தாவி விடுகின்றனர். இந்திய அளவில் மட்டுமன்றி, உலகளவில் செயல்படும் இதர நாடுகளின் ஐடி நிறுவனங்கள், வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பதே இதற்குக் காரணம்.

விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்டவை படிப்படியாக தங்களது பணியாளர்களை அலுவலகங்களுக்கு இழுத்துள்ளன. தாமதமாக சுதாரித்த இன்ஃபோசிஸ், ’வாரத்தில் 3 நாள்’ என முதலில் அறிவித்து, அதில் பலனில்லாது போகவே தற்போது ’மாதத்தில் 10 நாளேனும்’ என உபாயத்தை மாற்றியுள்ளது. நிர்வாக அலுவலர்கள், மனிதவளத் துறையினர் இந்த அழைப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தொடங்கி வைத்த, ’நாட்டின் வளர்ச்சிக்கு வாரத்தில் 70 மணி நேரம் உழைப்பது அவசியம்’ என விவாதம் தனியாக கவனம் ஈர்த்து வருகிறது. இப்போது ஊழியர்களை அதிகம் அழுத்தம் தராது, அலுவலகத்துக்கு இழுக்கும் பணியில் இன்ஃபோசிஸ் ஈடுபட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in