இன்புளுயன்சா காய்ச்சல்; கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

இன்புளுயன்சா காய்ச்சல்
இன்புளுயன்சா காய்ச்சல்இன்புளுயன்சா காய்ச்சல்; கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

இன்புளுயன்சா காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுத் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டுள்ளார். அதில், ‘’ இன்புளுயன்சா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநில அரசுகள் இதனை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், மருத்துவ பொருள்கள் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிறார்கள், முதியோர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் நோயின் தன்மை குறித்து தீவிர விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

சில மாநிலங்களில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்புளுயன்சா காய்ச்சல் - மத்திய அரசு கடிதம்
இன்புளுயன்சா காய்ச்சல் - மத்திய அரசு கடிதம்இன்புளுயன்சா காய்ச்சல்; கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in