வெப்ப அலையோடு சேர்ந்து கொண்ட இன்புளுயன்சா: முழு ஆண்டுத் தேர்வை முன்னதாக நடத்த திட்டம்?

இன்புளுயன்சா  காய்ச்சல்
இன்புளுயன்சா காய்ச்சல்வெப்ப அலையோடு சேர்ந்து கொண்ட இன்புளுயன்சா: முழு ஆண்டுத் தேர்வை முன்னதாக நடத்த திட்டம்?

இன்புளுயன்சா காய்ச்சல் பரவலால் தமிழகத்தில் முன்னதாகவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்புளுயன்சா தொற்று வேகமாக பரவி வருகிறது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் இந்த தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அண்மை காலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 10 நாள்கள் முன்னதாகவே முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, ஏப். 27-ம் தேதி தேர்வுகள் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் ஏப்.17-ம் தேதி முதல் 24 வரை தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. காய்ச்சல் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தேர்வை முன்பே நடத்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in