இலங்கை போலீஸிடமிருந்து தப்பி தமிழகம் வந்த வாலிபர் புழல் சிறையில் அடைப்பு!

சிந்துஜன்
சிந்துஜன்

தமிழகத்தில் ஊடுருவிய இலங்கை வாலிபர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கை மன்னார் மாவட்டம் தோட்டவேலி ஜோஸப்வாஸ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சிந்துஜன்(22). இவர் கடந்த 17-ம் தேதி இரவு 10 மணியளவில் தனது தந்தையுடன் மர்மப்படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். இவர் தந்தை மட்டும் ராமேஸ்வரம் டவுன் போலீஸில் தஞ்சமடைந்தார்.

சிந்துஜன் நாமக்கல் சென்று அங்கிருந்து பரமத்திவேலூர் முகாமில் உள்ள தனது சித்தப்பா ரவீந்திரன் வீட்டுக்குச் சென்றார். அங்கு சில நாட்கள் தங்கிய அவர் நேற்று காலை மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தஞ்சமடைந்தார்.

அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 -ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு வவுனியா போலீஸார் அழைத்துச் சென்றபோது தப்பித்து தனுஷ்கோடி வந்து பதுங்கியிருந்தது தெரியவந்தது. உரிய ஆவணமின்றி தமிழகத்தில் தங்கியிருந்த சிந்துஜனை, அந்நியர் ஊடுருவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in