
வருசநாடு அருகே நாய்கள் குதறிய சிசுவின் உடலை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே பிறந்து சில நாட்களேயான ஆண் சிசு உடல் தங்கம்மாள்புரம் அருந்ததியர் காலனி அருகே ஒரு ஓடையில் நேற்று மாலை கிடந்தது. அந்த உடலை நாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு வந்த போலீஸார், நாய் கூட்டத்தை விரட்டினர். தலை, கால்களுடன் எஞ்சியிருந்த சிசுவின் உடலை போலீஸார் மீட்டனர். இதன்பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். ஓடையில் சிசுவை வீசி சென்றது யார்? என்பது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.