10 பேருக்கு வாய்ப்பு: ரோகித் தலைமையில் களமிறங்கும் இந்தியப் படை: டி20 உலகக் கோப்பைக்கான‌ அணி வீரர்கள் அறிவிப்பு

10 பேருக்கு வாய்ப்பு: ரோகித் தலைமையில் களமிறங்கும் இந்தியப் படை: டி20 உலகக் கோப்பைக்கான‌ அணி வீரர்கள் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது. முதல் ஆட்டத்தில் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, 2-வது போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து இறுதி வாய்ப்பை இழந்தது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதனிடையே, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களை இன்று அறிவித்துள்ளது பிசிசிஐ. கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், தீபக் ஹுடா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

மேலும், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சாஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முகமது சமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபப் சஹர் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in