இந்தியாவிலேயே நீண்ட தூர ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து: காரணம் தெரியுமா?

 ரயில்
ரயில்இந்தியாவிலேயே நீண்ட தூர ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து

கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக தூரம் செல்லும் நெடுந்தூர ரயில் இதுதான். இந்த ரயில் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை செல்லும் ரயிலானது திருவனந்தபுரம் வழியாக கேரளத்திற்குள் சென்று அதன்பின் மீண்டும் தமிழகத்தின் கோவை, திருப்பூர் வழியாக சேலம் வழியாக திப்ரூகர் வரை செல்லும். மொத்தம் 50 நிறுத்தங்களைக் கொண்ட இந்த ரயில் தான் இந்தியாவிலேயே அதிக தூரம் பயணிக்கும் ரயிலாகும்.

இதுகுறித்து திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,“தென்கிழக்கு ரயில்வேயில் கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது. இந்தப் பணிகளின் காரணமாக திப்ரூகர் - கன்னியாகுமரி இடையேயான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 25 மற்றும் 28-ம் தேதிகளில் திப்ரூகரில் இருந்து ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை செல்லும் ரயிலானது மார்ச் மாதம் 2 மற்றும் 5-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த நாள்களில் இருந்து வழக்கமான அட்டவணைப்படி இந்த ரயிலானது இயங்கும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in