இந்தியாவின் மிக நீளமான ரயில்வே சுரங்கப் பாதை: காஷ்மீரில் உருவாக்கிய வடக்கு ரயில்வே

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே சுரங்கப் பாதை: காஷ்மீரில் உருவாக்கிய வடக்கு ரயில்வே
மாதிரிப் படம்

காஷ்மீரில் 12.758 கிலோமீட்டர் தொலைவுள்ள டி-49 ரயில்வே சுரங்கப்பாதைப் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்திருக்கிறது இந்திய ரயில்வே. இந்திய ரயில்வே வரலாற்றில் மிக நீளமான சுரங்கப் பாதை எனும் பெருமையை இது பெறுகிறது. இதற்கு முன்பு, பனிலால் - காஸிகுந்த் பகுதியில் யூஎஸ்பிஆர்எல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பீர் பஞ்சல் சுரங்கப்பாதைதான் அதிகம் நீளம் கொண்டது. அதன் நீளம் 11.2 கிலோட்டர் ஆகும்.

நேற்று நிறைவடைந்த இந்தச் சுரங்க பாதை, வடக்கு ரயில்வேயின் உதம்பூர்- ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் பாதை (யூஎஸ்பிஆர்எல்) திட்டத்தின் கீழ், கத்ரா - பனிலால் பகுதியின் சம்பர் மற்றும் அர்பிஞ்சலா ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்தச் சுரங்கப் பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய சுரங்கப்பாதை முறை (என்ஏடிஎம்) எனும் தொழில்நுட்பம் இந்தச் சுரங்கப் பாதைத் திட்டப் பணிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது ட்ரில்லிங் செய்வது மற்றும் பாறைகளை வெடிக்கச் செய்வதில் அதி நவீனத் தொழில்நுட்பம் ஆகும். குதிரைக் குளம்பின் வடிவில் இந்தச் சுரங்கப் பாதையின் குறுக்குவெட்டுத் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக வடக்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. 272 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 161 கிலோமீட்டர் தொலைவு ரயில்வே பாதை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.