2027-க்குள் இந்தியாவின் கேமிங் சந்தை நான்கு மடங்கு வளரும்!

2027-க்குள் இந்தியாவின் கேமிங் சந்தை  நான்கு மடங்கு வளரும்!

இந்தியாவில் கேமிங் சந்தை வளர்ச்சி 2027-ம் ஆண்டுக்குள் நான்கு மடங்காக அதிகரிக்கும் என லுமிகாய் எனும் கேமிங் ஊடக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் செல்போன் மூலம் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 2022-ம் நிதியாண்டைப் பொறுத்தவரை உலகிலேயே அதிகமான செல்போன் கேமர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் நடந்திருக்கும் கேம் தரவிறக்கங்களின் எண்ணிக்கை 15 பில்லியன். இந்நிலையில், இந்தியாவில் கேமிங் சந்தை அதீத வளர்ச்சியடைந்துவருகிறது. கடந்த ஆண்டில் 45 கோடியாக இருந்த கேமர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் அரை பில்லியனைத் (50 கோடி) தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, லுமிகாய் நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ஸ்ரீராம் கீலிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவின் கேமிங் சந்தை 2.6 பில்லியன் டாலர் (21.4 ஆயிரம் கோடி ரூபாய்) ஆக உள்ளது என்றும், 2027-ம் ஆண்டுவாக்கில் இது 8.6 பில்லியன் டாலராக (70.79 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்திய கேமிங் சந்தை நான்கு மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்மி(BGMI), ஃப்ரீ ஃபயர் (Free Fire) போன்ற கேம்கள் இந்தியாவில் அதிக வளர்ச்சி கண்டுவருவதாகக் கூறியிருக்கும் லுமிகாய் நிறுவனம் இந்தியாவில், செல்போன் கேம் விளையாடுபவர்களில் பெண்களின் சதவீதம் அதிகரித்துவருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவின் கேமர்கள் 60:40 எனும் விகிதத்தில் ஆண் மற்றும் பெண் கேமர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in