இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி: அர்விந்த் கேஜ்ரிவால் பெருமிதம்!

இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி: அர்விந்த் கேஜ்ரிவால் பெருமிதம்!

இந்தியாவின் முதல் மெய் நிகர் பள்ளியை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.

தொலை தூரங்களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய் நிகர் கற்றல் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வராமலேயே மாணவர்கள் பாடங்களைக் கற்க முடியும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயல் திறனை அறிந்து கொள்ள ஆசிரியர்களை சந்திப்பார்கள். கரோனா காலத்திற்குப் பிறகு மெய் நிகர் பள்ளிகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

இது குறித்துப் பேசிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை இன்று தொடங்கியுள்ளோம். டெல்லி மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் டெல்லி மாதிரி மெய்நிகர் பள்ளியில் இன்று முதல் 9ம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மெய்நிகர் பள்ளியில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளைக் கவனிக்க முடியும். மேலும் அதைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படும். நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in