இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: நவ.18 அன்று விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: நவ.18 அன்று விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி துறையில் தனியாரும் பங்கெடுக்கத் தொடங்கியதன் அடையாளமாக, நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான ’விக்ரம்-எஸ்’ நவ.18 அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்திய விண்வெளிய் ஆய்வு மையமான ’இஸ்ரோ’ அளப்பரிய சாதனைகளை புரிந்து வருகிறது. ஆனபோதும் விண்வெளித்துறையில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஈடுகொடுக்க இந்தியாவிலும் தனியார் துறையின் பங்களிப்பு அவசியமானது. அந்த வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்திய விண்வெளி துறையில் அடியெடுத்திருக்க, அவர்களில் ’ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம் பாய்ச்சல் காட்டி உள்ளது. இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளின் பங்கெடுப்பால் வளர்ச்சி கண்டு வரும் ஸ்கைரூட், தனது முதல் விண்வெளி தடத்தை பதிக்க காத்திருக்கிறது.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக ’விக்ரம்’ வரிசையிலான ராக்கெட்டுகளை ஸ்கைரூட் தொடர்ந்து விண்ணுக்கு ஏவ இருக்கிறது. விக்ரம்-எஸ் ராக்கெட்டைத் தொடர்ந்து விக்ரம் வரிசையின் அடுத்த 3 ராக்கெட்டுகள் 2023ல் ஏவப்பட உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன், நவ.18 காலை 11.30 மணிக்கு விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in