ஃபேஸ்புக் நண்பரை மணக்க பாகிஸ்தான் சென்ற அஞ்சு இந்தியா திரும்புகிறார்... ஆவலுடன் காத்திருக்கும் காவல்துறை விசாரணை!

பாகிஸ்தானில் அஞ்சு - நஸ்ருல்லா
பாகிஸ்தானில் அஞ்சு - நஸ்ருல்லா

ஃபேஸ்புக் நண்பரை மணக்க பாகிஸ்தான் சென்ற அஞ்சு, தனது குழந்தைகளை பார்க்க இந்தியா திரும்புகிறார். அவரை வரவேற்க ராஜஸ்தான் போலீஸாரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஞ்சுவுக்கு 34 வயது ஆகிறது. அரவிந்த் என்பவருடன் திருமணமாகி, அவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் இருக்கிறார்கள். 2019-ல் ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமான நஸ்ருல்லா என்ற நண்பரைத் தேடி கடந்த ஜூலை மாதம் அஞ்சு பாகிஸ்தான் பயணப்பட்டார். பணி நிமித்தம் வெளியூர் செல்வதாக கணவரிடம் பொய் சொல்லிவிட்டு, அட்டாரி - வாகா எல்லை வாயிலாக பாகிஸ்தானுக்குள் அவர் நுழைந்தார்.

அஞ்சு
அஞ்சு

பாகிஸ்தான் காதலனை சந்திக்க வந்திருக்கும் இந்திய காதலி என பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரத்த பின்னர், அஞ்சு குறித்தான முழு தகவல்களும் இந்தியாவில் பிரபலமாயின. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் வசிக்கும் 29 வயதான நஸ்ருல்லாவை சந்தித்த அஞ்சு, பாத்திமாவாக பெயருடன் மதமும் மாறி ஃபேஸ்புக் நண்பரை மணந்தார். அஞ்சு - நஸ்ருல்லா திருமணத்தையும், அவர்கள் ஜோடியாக பொதுஇடங்களை சுற்றி வந்ததையும் பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டன.

அதன் பிறகு நாள்போக்கில் அஞ்சுவை மறந்திருந்த இந்திய ஊடகங்களுக்கு மீண்டும் அவர் செய்தியாகி இருக்கிறார். ராஜஸ்தானின் பீவாடியில் இருக்கும் தனது குடும்பத்தினரை, குறிப்பாக தனது இரு குழந்தைகளையும் சந்திக்க அஞ்சு விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறார். இதனை அஞ்சு என்கிற பாத்திமாவின் தற்போதைய கணவர் நஸ்ருல்லாவும் உறுதி செய்துள்ளார். ஆனால் ராஜஸ்தானில் இருக்கும் அஞ்சுவின் இந்திய கணவர் அரவிந்த் இது குறித்து பேச மறுக்கிறார்.

பாகிஸ்தானில் அஞ்சு - நஸ்ருல்லா
பாகிஸ்தானில் அஞ்சு - நஸ்ருல்லா

விரைவில் இந்தியா வரும் அஞ்சுவை வரவேற்க அவரது குடும்பத்தினர் ஆவலாக இல்லை. ஆனால் ராஜஸ்தான் போலீஸார் தயாராக உள்ளனர். மனைவி அஞ்சுவுக்கு எதிராக கணவர் அரவிந்த் காவல் நிலையத்தில் விரிவான புகார் அளித்திருக்கிறார். கணவரை விவாகரத்து செய்யாது இன்னொருவரை மணத்தல், அவதூறு, மிரட்டல் உட்பட பல்வேறு குற்றவியல் பிரிவுகளின் கீழ் அஞ்சுவுக்கு எதிராக அரவிந்த் புகார் பதிவு செய்துள்ளார். எனவே, இந்தியா திரும்பும் அஞ்சுவுக்கு, போலீஸ் விசாரணைகளை சந்திப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in