6 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய மோப்ப நாய்கள்: துருக்கியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இந்திய  மோப்ப நாய்கள் ஜூலி- ரோமியோ
இந்திய மோப்ப நாய்கள் ஜூலி- ரோமியோ

துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த 6 வயது சிறுமியை இந்திய மோப்ப நாய்கள் மீட்டிருப்பது நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து விட்டனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய தேசிய மீட்பு படையைச் சேர்ந்த மோப்ப நாய்கள் ஜூலி மற்றும் ரோமியோ துருக்கியின் நட்டாகி பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது கட்டிட இடிபாடுகளில் 6 வயது சிறுமி சிக்கி இருப்பதை ஜூலியும் ரோமியோவும் கண்டுபிடித்து கொடுத்து இருக்கிறது. இதையடுத்து சிறுமியை இந்திய மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மோப்ப நாய்களான ஜூலி, ரோமியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in