`உத்தராகண்ட்டில் எந்தநேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்'- எச்சரிக்கும் இந்திய விஞ்ஞானி

 விஞ்ஞானி பூர்ண சந்திரராவ்
விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் `உத்தராகண்ட்டில் எந்தநேரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்'- எச்சரிக்கும் இந்திய விஞ்ஞானி

உத்தராகண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் அதிர்ச்சி தகவவலை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த சோகவடு மறைவதற்குள் மீண்டும் மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று நடந்த நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் துருக்கி மக்கள் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். உலக நாடுகள் பல துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவி செய்து வருகின்றன. இந்த அதிர்ச்சியில் இருந்து உலக நாடுகள் மீள்வதற்குள் அடுத்து இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளார். ஏற்கெனவே துருக்கி, சிரியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று அந்த விஞ்ஞானி கணித்திருந்தார்.

தற்போதைய இந்திய விஞ்ஞானி ஒருவர் உத்தராகாண்டில் எந்த நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரித்து இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் கூறுகையில், "நேபாளத்தின் வடக்கு பகுதிக்கும் இமாச்சல் பிரதேசத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டு இருக்கிறது. இதன் தாக்கம் உத்தரகாண்டில் எதிரொலிக்கும். இதனால் உத்தராகண்டில் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆண்டுக்கு 5 சென்டிமீட்டர் அளவுக்கு இந்தியாவின் நிலத்தட்டுகள் நகர்ந்து வருகிறது. இதனால் புவியின் மேற்பரப்பில் அளவுக்கு அதிகமான வாய்ப்பு ஏற்பட்டு பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in