அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் குத்திக்கொலை: கொரிய மாணவர் கைது

அமெரிக்காவில்  இந்திய வம்சாவளி மாணவர்  குத்திக்கொலை: கொரிய மாணவர் கைது

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரை அவரது அறை நண்பரான கொரிய மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பர்டூ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வருண் மணீஷ் சேடா 20) என்ற மாணவர் டேட்டா சயின்ஸ் பிரிவில் பயின்று வந்தார். இவர் அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிப் படித்து வந்தார். இவருடன் கொரியாவைச் சேர்ந்த மாணவர் மின் ஜிம்மி ஷா என்ற கொரியாவைச் சேர்ந்த மாணவரும் தங்கியிருந்தார்.

நேற்று காவல் துறைக்கு போன் செய்த மின் ஜிம்மி ஷா, தான் வருண் மணீஷ் சேடாவை கொலை செய்தததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், விரைந்து சென்ற போது வருண் மணீஷ் சேடா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். கூரிய ஆயுதத்தால் வருண் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொரிய மாணவர் மின் ஜிம்மிஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். எதற்காக அவர் வருணைக் கொலை செய்தார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in