’வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் நவீன ஏவுகணை’: வெற்றிகரமாக சோதித்தது இந்தியக் கடற்படை!

’வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் நவீன ஏவுகணை’: வெற்றிகரமாக சோதித்தது இந்தியக் கடற்படை!

ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பலில் இருந்து குறுகிய தூர வான் இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் VL-SRSAM ஏவுகணையை இந்தியக் கடற்படை இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் கடற்படை மற்றும் டிஆர்டிஓவின் முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் குறுகிய தூர இலக்குகளை தரையிலிருந்து துல்லியமாக தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் தொழில்துறையினருக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்திய கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளார்

'ஆத்மநிர்பர் பாதுகாப்பு' என்ற அரசாங்கத்தின் பார்வைக்கு ஊக்கமளித்த டிஆர்டிஓவிற்கு பாராட்டுகள் என பாதுகாப்பு உற்பத்தித் துறையும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளது. ஏற்கெனவே ஜூன் மாத தொடக்கத்தில், ஒடிசாவில் இருந்து அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் அக்னி-4 என்ற ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன ஏவுகணையால் இந்திய கடற்படையின் வலிமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in