குட் நியூஸ்... நடப்பு சாம்பியனை வீழ்த்தி அரை இறுதிக்குள் கெத்தாக நுழைந்தது இந்திய ஹாக்கி அணி!

இந்திய. ஹாக்கி அணி
இந்திய. ஹாக்கி அணி
Updated on
2 min read

2023 ம் ஆண்டுக்கான ஆசிய  சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக இந்திய அணி சிறப்பாக விளையாடி நடப்பு சாம்பியனான தென்கொரியாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது.

2023 ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி  சென்னையில் கடந்த 3 ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சௌத் கொரியா, சீனா, ஜப்பான் என மொத்தம் 6 அணிகள் இதில் களமிறங்கியுள்ளது. கடந்த முறை அதாவது, 2021 ம் ஆண்டு சௌத் கொரியா அணி கோப்பையை வென்றது. 

இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. தொடரை தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது.  கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத அணிகளாக இந்தியாவும் நடப்புச் சாம்பியனான தென் கொரியாவும் இருந்து வந்தன.

இந்த இரு அணிகளும் மோதிய விறுவிறுப்பான  போட்டி மிகவும் கோலாகலமாக ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணி கோல் அடித்து தனது கணக்கை கம்பீரமாக துவங்கியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் தென் கொரியாவும் ஒரு கோல் அடித்து முதல் சுற்றை சமனில் கொண்டு வந்து நிறுத்தியது. 

இரண்டாவது சுற்றில் இந்திய அணி மீண்டும் ஒரு கோல் அடிக்க ரசிகர்கள் உற்சாகமானார்கள். அதன் பின்னர் கோல் அடிக்க தென் கொரியா அணி எவ்வளவோ முயற்சி செய்தும் மூன்றாவது சுற்று முடியும் வரை அந்த அணியினரால் மேற்கொண்டு கோல் எதுவும் போட முடியவில்லை. ஆனால் மூன்றாவது சுற்றிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இன்னொரு கோல் அடித்தது.

இறுதிச் சுற்றில் இந்திய அணி தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கொரிய அணி வீரர்கள், கோல் அடிக்க வேண்டும் என்பதை விட இந்திய அணி வீரர்கள் கோல் அடிப்பதை தடுப்பதையே முழுமையாக செய்து வந்தனர். 4வது சுற்றின் கடைசி மூன்று நிமிடங்கள் இருக்கும்போது தென்கொரியாவின் ஜூகன் யாங் அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். 

இதனால் போட்டியின் சுவாரஸ்யம் மேலும் அதிகமானது. ஆனாலும் இறுதிவரை தென்கொரியாவால் அடுத்த கோலை அடிக்க முடியாததால், இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் தோல்வியைச் சந்திக்காத அணி என்ற பெருமையுடன் கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.

இந்திய அணி இதுவரை  4 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றியும்,  ஒரு போட்டியில் டிரா என மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. இந்திய அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டும் உள்ளது. அதில் வரும் 9 ம் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்ளவுள்ளது

கடந்த 6 சீசன்களிலும் தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை.  அதனை இம்முறை இந்திய அணி முறியடிக்குமா என்பது  அரை இறுதிக்குப் பின்னர் முடிவாகும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in