செல்போன்கள்
செல்போன்கள்

5 மாதங்களில் இந்திய செல்போன்கள் ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்திய செல்போன்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுவியல் சங்கம் (ஐசிஇஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஇஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் இந்தியாவில் இருந்து சுமாா் ரூ.24,850 கோடி மதிப்பிலான செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது 80 சதவீதத்துக்கும் மேலாக வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ.45,000 கோடி மதிப்பிலான செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சாதனங்களை செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும். 2025-26-ம் நிதியாண்டுக்குள் நாட்டில் மின்னணு பொருள்களின் உற்பத்தி ரூ.25 லட்சம் கோடியை எட்டுவதற்கு அரசாங்கம் இலக்கு நிா்ணயித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in