ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2வது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஹராரேயில் இன்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 38 ஓவர்களில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக பேட் செய்த இந்தியா 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இன்று டாஸ்வென்ற இந்திய அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரயான் பர்ல் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் தரப்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ஷிகர் தவான் 33 ரன்களும், சுப்மன் கில் 33 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் லூக் ஜாங்வே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏற்கெனவே முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in