நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா - தொடரையும் கைப்பற்றி அபாரம்!

நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா - தொடரையும் கைப்பற்றி அபாரம்!

நியூசிலாந்து எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப் பெற்றது. இதன் காரணமாக 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் டக் அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து கான்வே, நிக்கோல்ஸ், மிட்செல் லாதம் ஆகியோரும் அடுத்தடுத்து ஒன்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ் மற்றும் சாண்ட்னர் மட்டும் சற்று நிலைத்து ஆடினர். பிலிப்ஸின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் எடுத்தவுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் 34.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். நியூசிலாந்து அணியில் பிலிப்ஸ் 36 ரன்களையும், சாண்ட்னர் 27 ரன்களையும் எடுத்தனர்.

109 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in