செஸ் ஒலிம்பியாட்: வெற்றியோடு பயணத்தைத் தொடங்கிய இந்திய வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட்: வெற்றியோடு பயணத்தைத் தொடங்கிய இந்திய வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் பங்கேற்ற இந்திய அணி வீரர்களான ரோனக் சத்வானி, ஈஷா கர்வாடே, பிரதியுஷா, கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தாஆகியோர் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று மாமல்லபுரத்தில் செஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்திய அணி வீரர் ரோனக் சத்வானி இந்திய ஓபன் பிரிவு ‘பி’ சார்பாக விளையாடினார். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமானை எதிர் கொண்டார். வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ரோனக் தனது 36-வது காய் நகர்த்தலில் வெற்றிவாகை சூடினார். அதுபோல் இந்திய 'சி' பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஹாங்காங் அணி வீராங்கனையை 49-வது நகர்த்தலில் ஈஷா கர்வாடே வெற்றி பெற்றுள்ளார். ஓபன் 'சி' பிரிவில் இடம் பெற்ற கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்களின் வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in