வங்கதேசம் அணி வாஸ் அவுட்: டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

வங்கதேசம் அணி வாஸ் அவுட்: டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக இந்தியா கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய வங்கதேசம் அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் மொமினுல் ஹாக் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஓரளவு நிலைத்து ஆடியது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 93 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியின் சார்பில் தைஜுல் இஸ்லாம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வங்க தேச அணி தனது இரண்டாவது இன்னிங்சிலும் திணறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேசம் சார்பில் லிட்டன் தாஸ் 73 ரன்களும், ஜாகிர் ஹசன் 51 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியின் வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4 வது ஆட்ட நாளான இன்று கடைசிகட்டத்தில் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் மற்றும் அஸ்வின் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்றனர். இதனால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அஸ்வின் 42 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களும் எடுத்தனர். வங்கதேச வீரர் மெஹிடி ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in