இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதல் பேட்டிங்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதல் பேட்டிங்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. ஏற்கெனவே இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்திய அணியின் இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர்,கே.எல்.ராகுல், அக்ஸர் படேல், வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி ஏற்கெனவே இந்த தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 113 ரன்களையும், ரோகித் சர்மா 83 ரன்களையும், கில் 70 ரன்களையும் எடுத்ததால் இந்தியா 373 ரன்களை குவித்தது. கொல்கத்தாவில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 215 ரன்களில் சுருண்டது. அடுத்து பேட் செய்த இந்தியா 43.2 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து வென்றது. இந்த தொடரில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in