ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் - விராட் கோலிக்கு பின்னடைவு: பந்துவீச்சில் முகமது சிராஜ் முதலிடம்!

முகமது சிராஜ்
முகமது சிராஜ்வெற்றிக்கொண்டாட்டத்தில் முகமது சிராஜ், சூரியகுமார் யாதவ், விராட் கோலி

ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சுப்மன் கில்லும் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

ஐசிசி அணிகளின் தரவரிசைப் பட்டியலில் டி20 போட்டிகளில் இந்தியா 267 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இங்கிலாந்து 2ம் இடத்திலும், பாகிஸ்தான் 3ம் இடத்திலும் உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையிலும் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இங்கிலாந்து 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ம் இடத்திலும், இங்கிலாந்து 3ம் இடத்திலும் உள்ளது.

ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 729 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 727 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹாசில்வுட் இரண்டாம் இடத்தையும், 708 புள்ளிகளுடன் நியூசிலாந்து ட்ரெண்ட் போல்ட் 3ம் இடத்தையும் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் 6 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 7 இடத்துக்கு சரிந்துள்ளார். இப்பட்டியலில் ரோகித் சர்மா 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணி வெற்றி
இந்திய அணி வெற்றிஐசிசி தரவரிசை இந்தியா முதலிடம்

டி20 போட்டிகளின் தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் சூர்யகுமார் முதலிடத்தில் உள்ளார். டி20 ஆல் ரவுண்டர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா 2ம் இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 7ம் இடத்திலும், ரோகித் சர்மா 10ம் இடத்திலும் உள்ளனர். பவுலர்களில் ஜஸ்பிரித் பும்ரா 3ம் இடத்திலும், அஸ்வின் 4ம் இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2ம் இடத்திலும் உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in