அர்விந்த் கேஜ்ரிவால் கைது குறித்து கருத்து... அமெரிக்காவுக்கு இந்தியா கடும் ஆட்சேபனை!

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் ஆஜரான அமெரிக்க செயல் துணைத் தலைவர் குளோரியா பெர்பெனா
வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் ஆஜரான அமெரிக்க செயல் துணைத் தலைவர் குளோரியா பெர்பெனா

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா, கருத்து தெரிவித்ததற்கு அந்நாட்டு செயல் துணைத் தலைவரை அழைத்து இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கேஜ்ரிவால் கைது உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. கேஜ்ரிவால் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனிக்கு இந்தியா சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது. இச்சூழலில் அமெரிக்காவும் கேஜ்ரிவால் விவகாரத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட செயல்முறையை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” என தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த கருத்து சர்வதேச அளவில் பேசுபொருளானது. எனவே அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்தியா ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்காவின் செயல் துணைத் தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு இன்று காலை சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இன்று காலை நேரில் வரவழைக்கப்பட்டார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், கேஜ்ரிவால் விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் சில சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களுக்கு நாங்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கிறோம். ராஜதந்திரத்தில், நாடுகள் மற்றவர்களின் இறையாண்மை, உள் விவகாரங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக ஜனநாயக நாடுகளில் இந்த பொறுப்பு இன்னும் அதிகமாக உள்ளது. இல்லையெனில் இது ஆரோக்கியமற்ற முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும். இந்தியாவின் சட்ட செயல்முறைகள் ஒரு சுயாதீனமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டவை. இது சரியான நேரத்தில் முடிவுகளுக்கு உறுதிபூண்டுள்ளது. அதன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தேவையற்றது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in