உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா: நியூசிலாந்து அணியால் அதிர்ஷ்டம்!

இந்தியா டெஸ்ட் அணி
இந்தியா டெஸ்ட் அணிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா: நியூசிலாந்து அணியில் அதிர்ஷ்டம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி தகுதிப் பெற்றுள்ளது. ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2021-2023 இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் இலங்கையை தோற்கடித்ததையடுத்து, இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் பரபரப்பாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இன்று நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்கள் என்ற இலக்கை ஆட்டத்தின் கடைசி பந்தில் எட்டி வெற்றிபெற்றது நியூசிலாந்து, அந்த அணியின் கேன் வில்லியம்சன் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றிக்கு வித்திட்டார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்றதால் அந்த அணி இறுதிப்போட்டியில் நுழைய வாய்ப்பில்லாமல் போனது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. கடந்த முறை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியுற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in