இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 8,582 ஆக உயர்வு!

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 8,582 ஆக உயர்வு!

இந்தியாவில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று மெல்ல உயர்ந்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,582 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,32,22,017 ஆக உயர்ந்துள்ளது. 44,513 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,761 ஆக உயர்ந்துள்ளது. 4,435 பேர் இன்று கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 13,04,427 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in