இந்தியா தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்படும்: ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

தண்ணீர் பற்றாக்குறை
தண்ணீர் பற்றாக்குறைஇந்தியா தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்படும்: ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

2016ம் ஆண்டில் 933 மில்லியனாக இருந்த நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை, 2050ம் ஆண்டில் 1.7 - 2.4 பில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஐநாவின் முதன்மை அறிக்கை தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நீர் மாநாட்டிற்கு முன்னதாக செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட 'ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2023: கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு' அறிக்கையில், நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 80% ஆசியாவில் வாழ்கின்றனர். குறிப்பாக, இந்தியா, வடகிழக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், "தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை 2016ல் 933 மில்லியனிலிருந்து (உலக நகர்ப்புற மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு) 2050ல் 1.7-2.4 பில்லியன் மக்களாக (உலக நகர்ப்புற மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிலிருந்து கிட்டத்தட்ட பாதி வரை) அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் நமது பொதுவான எதிர்காலம், அதை சமமாகப் பகிர்ந்துகொள்வதற்கும் அதை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கும் ஒன்றாகச் செயல்படுவது அவசியம். உலகளவில், இரண்டு பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. 3.6 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பாக தண்ணீர் நிர்வகிக்கப்படும் சுகாதார வசதி இல்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

நீர் நெருக்கடி
நீர் நெருக்கடிஇந்தியா தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்படும்: ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, "உலகளாவிய நீர் நெருக்கடி கட்டுப்பாட்டை மீறி வருவதைத் தடுக்க வலுவான சர்வதேச வழிமுறைகளை நிறுவுவதற்கான அவசரத் தேவை உள்ளது" என்று கூறினார். அறிக்கையின் தலைமை ஆசிரியர் ரிச்சர்ட் கானர்," தண்ணீர் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வருகின்றன. நாம் அதை நிவர்த்தி செய்யாவிட்டால், நிச்சயமாக ஒரு உலகளாவிய நெருக்கடி உருவாகும்" என்று கூறினார்

இது தொடர்பாகப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "மனிதகுலத்தின் உயிர்நாடி நீர், அது நாம் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது. மக்கள் மற்றும் புவியின் ஆரோக்கியம், மீள்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு தண்ணீர் அவசியம். ஆனால், மனிதகுலம் கண்மூடித்தனமாக ஆபத்தான பாதையில் பயணிக்கிறது. அளவுக்கதிகமான நுகர்வு, அதீத வளர்ச்சி, மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தப்படாத புவி வெப்பமடைதல் ஆகியவை மனிதகுலத்தின் உயிர்நாடியை துளி துளியாக வடிகட்டுகின்றன. இந்த அறிக்கை எதிர்கால சந்ததியினருக்கான விலைமதிப்பற்ற தண்ணீர் வளத்தைப் பாதுகாப்பது கூட்டாண்மையைச் சார்ந்தது என்பதை நினைவூட்டுகிறது” என்று தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in