வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஆபரேஷன் அஜய் தயார்... இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான யுத்தம் 6-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது. இதில், ஹமாஸை சேர்ந்த நிதி அமைச்சர் உட்பட 2 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அஷ்கெலோன் நகர் மீது ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை தொடுத்தனர். இதனை அயர்ன் டோம் தொழில்நுட்பம் மூலம், வானிலேயே இஸ்ரேல் அழித்தது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், காஸா தரப்பில் சுமார் 1,000பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் போரின் போது இந்தியர்களை காப்பாற்றுவதற்காக அங்கு விமான சேவை தொடங்கப்பட்டிருந்தது. அதேபோன்று தற்போதும் இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்க விமான சேவையை தொடங்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் நேற்று தெரிவித்தார். அதன்படி, இன்று இஸ்ரேலுக்கான விமான சேவையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் அஜய் என பெயரிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அதில், இந்தியா திரும்ப 2,460 பேர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் அழைத்து வரும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல் விமானம் இன்று இரவு 11.30 மணிக்கு இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தேவைப்பட்டால் மீட்பு பணிக்கு இந்திய விமானப்படை விமானங்களும் பயன்படுத்தப்படும் என்று வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
பயணிகள் ரயிலோடு சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதல்; தடம் புரண்ட பெட்டிகள்: அதிகாலை நடந்த விபத்தால் பயணிகள் கதி?
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு; அரசுக்கு 3.48 கோடி இழப்பு!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த தேனி ஆசிரியை- அதிகாரிகள் அதிர்ச்சி!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
அதிர்ச்சி... தூங்கும்போது இரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை
x
காமதேனு
kamadenu.hindutamil.in