ஸ்டார்ட்அப்களில் உலகிலேயே இந்தியாவுக்கு 3வது இடம்: ஸ்மிருதி இரானி பெருமிதம்

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

நாடு முழுவதும் 656 மாவட்டங்களில் 84,400 க்கும் மேற்பட்ட வணிகங்களை செயல்படுவதன் மூலம், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டில் நாட்டில் 720 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது இந்திய ஸ்டார்ட் அப் வணிகத்தின் மதிப்பு சுமார் 332.7 பில்லியன் டாலர்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் முத்ரா யோஜனா உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in