அதிர்ச்சி... இந்த மருந்துகளுக்கு இந்தியாவில் பயங்கர தட்டுப்பாடு!

காசநோய் நோயாளியை பரிசோதிக்கும் மருத்துவர்
காசநோய் நோயாளியை பரிசோதிக்கும் மருத்துவர்

இந்தியாவில் கொரோனா காலத்துக்குப் பின்னர் காசநோய் அதிகமானோரை பாதித்திருக்கும் நிலையில் அதற்கு எதிரான மருந்துகளின் தட்டுப்பாடு நாட்டில் அதிகரித்துள்ளது.

கொரோனா காலத்தில் பெருந்தொற்று அச்சம் காரணமாகவும், மருத்துவமனைகளை கொரோனா பாதிப்பு கண்டவர்கள் ஆக்கிரமித்திருந்ததாலும் உடல்நலத்தில் இதர பாதிப்பு கண்டிருந்தவர்கள் பாராமுகமாயினர். அவர்களில் காசநோயினால் பாதித்தவர்கள் கணிசமாக அதிகரித்திருந்தனர்.

இவை உட்பட இதர காரணங்கள் பலவற்றாலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் காசநோய் பரவல் அதிகரித்தது. ஆனால் அவற்றை முறையாக எதிர்கொள்ளும் அளவுக்கு மருந்துகள் இல்லாதது கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக சவாலாக நீடித்து வருகிறது.

காசநோய் மருந்துகள்
காசநோய் மருந்துகள்The Hindu

லைன்சோலிட், க்ளோஃபாசிமைன் மற்றும் சைக்ளோசரின் உட்பட, காசநோய் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டுள்ளது. மாநிலங்களின் தேவைக்கு மத்திய அரசு போதுமான மருந்துகளை வழங்க முடியாத நிலைமை நீடிக்கிறது. மாநிலங்களின் நச்சரிப்பு அதிகரித்ததில், தாங்களாக மருந்துகளை கொள்முதல் செய்துகொள்ளுமாறு மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அதற்கான கூடுதல் நிதியையும் ஒதுக்காது இழுத்தடிப்பதாக புகாருக்கு ஆளானது.

காசநோய் நோயாளி
காசநோய் நோயாளிThe Hindu

இதர மாநிலங்களில் காசநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள சூழலில், தமிழகம் மாறுபட்டு நிற்கிறது. மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக தவித்து வரும் ஒரு சில மாநிலங்களுக்கு அவற்றை வழங்கியதுடன், அடுத்த சில மாதங்களுக்கு தமிழகத்தில் காசநோய் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லாத வகையில் பராமரிப்பினை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு குறுகிய கால காசநோய் தடுப்பு சிகிச்சைக்காக டிபிடி கூட்டு மருந்தை கொள்முதல் செய்த தமிழகம், காசநோய்க்கு எதிரான போரில் கடந்தாண்டு மே மாதத்தில் அந்த கூட்டு மருந்தை வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தை தொடங்கி செயல்படுத்தும் முதல் மாநிலம் என்ற வகையிலும் தமிழ்நாடு தற்போது முன்நிற்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in