‘வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை’ மத்திய அரசு அறிவிப்பால் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி

வெங்காய கொள்முதல்
வெங்காய கொள்முதல்

வெங்காயத்தின் விலை உள்நாட்டில் சரிந்து வருவதன் மத்தியில், அதன் ஏற்றுமதிக்கு காலவரையற்ற தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது ஏற்றுமதியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது, பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆச்சரியகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது வெளிநாட்டு சந்தைகளில் விலையை அதிகரிக்கச் செய்வதோடு, உள்நாட்டு வணிகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் வகையில் விலை சரிவுக்கும் வழி வகுத்துள்ளதாக அவர்கள் குறைபடுகின்றனர்.

வெங்காய சந்தை
வெங்காய சந்தை

வெங்காய ஏற்றுமதிக்கான நடப்பு தடை மார்ச் 31 உடன் காலாவதியாக இருக்கிறது. அதன் பின்னர் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்வடையும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். உள்ளூர் விலை பாதியாகக் குறைந்தது மற்றும் சீசன் விளைச்சல் அதிகரித்தது ஆகியவை ஏற்றுமதிக்கான தடை விலக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில் விலை சரிவு வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்த சந்தைகளில் வெங்காயத்தின் விலை 100 கிலோவுக்கு டிசம்பர் மாதத்தில் 4,500 ரூபாயாக இருந்தது. அதுவே தற்போது 1,200 ரூபாயாக குறைந்துள்ளது.

பெரிய வெங்காயம்
பெரிய வெங்காயம்

வங்கதேசம், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வெங்காய இறக்குமதியை நம்பியுள்ளன. இப்போது அவை சீனா அல்லது எகிப்து என மாற்று நாடுகளை நாட வேண்டியிருக்கும். இது தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் வகையில் இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை உருவாக்கக் கூடும். கடந்த நிதியாண்டில் இந்தியா 2.5 மில்லியன் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

‘சிங்கத்தின் கோட்டைக்குள்ள ஆடு சிக்கிடுச்சு... அண்ணாமலையை விமர்சிக்கும் கோவை அதிமுக!

வேறு வழி தெரியவில்லை... கடிதம் எழுதி விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!

அதிர்ச்சி... போலீஸ் தாக்கியதில் கால் டாக்சி ஓட்டுநர் உயிரிழப்பு?

டாக்டர் ராமதாஸூக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்... அதிர வைத்த பிரபல தயாரிப்பாளர்!

களத்தில் இறங்குகிறார் எஸ்.பி.வேலுமணி... செம குஷியில் கோவை, நீலகிரி அதிமுக வேட்பாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in