இரவு, பகலாக காத்திருந்த ரசிகர்கள்; 4 மணி நேரத்தில் 5,100 டிக்கெட் விற்பனை: அதிரப்போகும் இந்தியா-ஆஸி. போட்டி

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிஇரவு, பகலாக காத்திருந்த ரசிகர்கள்; 4 மணி நேரத்தில் 5,100 டிக்கெட் விற்பனை: அதிரப்போகும் இந்தியா-ஆஸி. போட்டி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் 4 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்க நேற்று முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இந்த நிலையில் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியதும், 5,100 டிக்கெட்டுகள் 4 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஏற்கெனவே ஆன்லைனில் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in