மாயாஜாலம் நிகழ்த்திய ஹர்திக் பாண்ட்யா - சவாலான இலக்கு: ஆஸ்திரேலியாவை வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

ஹர்திக் பாண்ட்யா
ஹர்திக் பாண்ட்யாமாயாஜாலம் நிகழ்த்திய ஹர்திக் பாண்ட்யா: ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 269 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஸ் தொடக்கத்திலிருந்தே இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இவர்களின் இணையை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். இந்த சூழலில் ஹர்திக் பாண்ட்யா ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அவரின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித்தும், மார்ஸும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் வேகம் மட்டுபட்டது. இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர்கள் கணிசமாக ரன்களை குவித்த வகையில் இருந்தனர், இந்திய பவுலர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கழட்டினார்கள். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் தரப்பில் மார்ஸ் 47 ரன்களையும், அலெக்ஸ் கெரே 38 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் ஹெட் மற்றும் மார்ஸ் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கையில், அந்த அணி 400 ரன்களைக் கூட எடுக்கலாம் என இந்திய ரசிகர்கள் அச்சமடைந்தனர். ஆனாலும், ஹர்திக் பாண்ட்யாவின் மாயாஜால பந்துவீச்சு ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்தது. ஆனாலும், ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் வரிசை சிறப்பாக உள்ளதால் இந்த சவாலான இலக்கை அடைய இந்திய அணி போராட வேண்டியிருக்கும். 3 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in