இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை: சூப்பர் 12-க்குத் தகுதி பெறப்போவது யார்?

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை: சூப்பர் 12-க்குத் தகுதி பெறப்போவது யார்?

உலகக் கோப்பை டி20 போட்டியில் இன்று நடைபெறும் சூப்பர் 12 போட்டியில்   இந்தியா- பாகிஸ்தான்  அணிகள் மோத  இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எட்டாவது உலக கோப்பை டி20 போட்டிகள்  ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வருகின்றன.  நவம்பர் 13-ம் தேதி வரை இந்த போட்டிகள்  நடைபெறவுள்ளன. 

இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.  

இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில்  சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்று  தொடங்கியது. அதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான மோதல் இன்று மதியம் 1:30 மணிக்கு  மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துவதைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. 

அதே நேரத்தில் இந்த இரண்டு அணிகளுடனும் மழையும் பலபரீட்சை நடத்த தயாராகி வருகிறது. போட்டி நடைபெறும் மெல்போர்னில் இன்று   80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால்  ரசிகர்கள்  கவலையுடன் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in