109 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்: 3வது டெஸ்டில் ஆட்டம் காட்டியது ஆஸ்திரேலியா!


இந்தியா ஆஸ்திரேலியா
இந்தியா ஆஸ்திரேலியா109 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்: 3வது டெஸ்டில் ஆட்டம் காட்டியது ஆஸ்திரேலியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது.

பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வெற்ற வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 12 ரன்களிலும், சுப்மான் கில் 21 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய புஜாரா ஒரு ரன்னிலும், விராட் கோலி 22 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் டக் அவுட்டாகவும் இந்தியா கடும் அதிர்ச்சியில் உடைந்தது.

பின்னர் களமிறங்கிய எஸ் எல் பரத் 17 ரன்களிலும், அஸ்வின் 3 ரன்களிலும், உமேஷ் யாதவ் 17 ரன்களிலும், முகமது சிராஜ் டக் அவுட்டாகியும் வெளியேறினார். அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 12 ரன்களுடன் இருந்தார். இதன் காரணமாக 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் மெத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. ஏற்கனவே 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வைக்கிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in